இங்க பாருங்க ... ! கீர்த்தி பாப்பா "மதர்'ஸ் டே" -க்கு அவங்க அம்மாக்கு கிப்ட்டு பண்ணி இருக்கா... நல்ல இருக்குல.. ரொம்ப அழகா இருக்குல..
நேத்து சொன்னேன்ல மதர்'ஸ் டே ன்னு.. அதுக்கு தான்...
ஹர்ஷந்த்: "மதர்ஸ் டே" -ன்னா ?
நான்: அம்மாவோட நாள்.. அம்மாக்கு ஸ்பெஷல் டே... நேத்து நான் கூட சொன்னேன்ல...
ஹர்ஷந்த்: அப்போ குட்டி பசங்களுக்குலாம் இல்லையா...?
நான்: .........?
ஒரு நிமிஷம் சுதாரித்துக் கொண்டு உங்களுக்கெல்லாம் நவம்பர் 14-த் "குழந்தைகள் தினம்"அன்னைக்கு தான் என்றேன்.
(மைண்ட் வாய்ஸ்) : இது என்னடா சோதனை...! ஒன்னு சொல்ல முடியலையே இந்த பசங்க கிட்ட... கொஞ்சம் உஷாரா இல்லனா அவ்ளோ தான் போல..!
இன்னும் நெறய கேள்வி கேட்டுருப்பானே...! ஏன் குட்டி பசங்களுக்கு இல்ல? எதுக்கு இல்ல? ஏன் அம்மாக்கு மட்டும் ஒரு டே-ன்னு எல்லாம்...
ஹப்பா.. தப்பிச்சேன்டா சாமி..! நல்ல வேளை... இன்னும் கேள்வி கேக்காம நவம்பர் எப்போ வரும்னு அவனே மந்த்ஸ் கால்குலேட் பண்ணிட்டு போய்ட்டான்....
தேங் யு டா தம்பி...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக