“நாங்க அப்போ தஞ்சாவூர்ல இருந்தோம். எனக்கு கல்யாணமாகும் போது 41 வயசு.."
"என்னது ! அவ்ளோ வயசா.! ஏன்? அவ்ளோ நாளா கல்யாணம் பண்ணிக்கல..!
"ஆனா, பொதுவா பிராமணர்கள் எல்லாம் லேட்டா தான் கல்யாணம் பண்ணிப்பா..."
"படிப்பு, வேலைன்னே இருந்துட்டேன்.. அம்மா மட்டும் எப்பவும் சொல்லிட்டே இருப்பா.. ஆன்னா பெருசா ஒன்னும் காதுல போட்டுக்காம இருந்துட்டேன். அப்போ சாஸ்திரிகள் ஒருவர் வீட்டுக்கு வருவார். அம்மாவை கஷ்டப்படுத்திட்டு பிரம்மச்சரியம் ஏற்கிறது சரியில்ல... அப்படின்னு சொன்னாரு.. அப்புறம் தான் அம்மாவே பாத்து கல்யாணம் பண்ணி வச்சா...."
இப்போ அம்மா இருக்காளா..? யார்கிட்ட இருக்கா..?"
"ஆங்.. என்கூட தான் இருக்கா.. அப்போ எல்லாம் ஒன்பது பத்து பேரு வீட்ல... எனக்கு சித்தி, அத்தை மாமான்னு நிறைய பேரு... இப்போ எல்லாம் ரெண்டு பேரு கூட இல்ல. ஒரே குழந்தை போதும்ங்கறா.."
"ஆமாமா, நான் எல்லாம் ஏழாவது பையன் வீட்ல.. இப்ப எல்லாரும் பிரிஞ்சு அங்கங்க இருக்கோம் .."
இப்படியாக நிறைய பேசிட்டே கூழாங்கல்ல எட்டு போட்டுட்டு இருந்த எங்களையும் அப்போபோ பாத்துட்டு இருந்தாரு அந்த தாத்தா... காதுல, காது மெஷின் போட்டுட்டு, டிப் டாப்பான பேண்ட் சட்டையில கால் மேல கால் போட்டு ஒல்லியா வெள்ளையா சந்தன பொட்டு வச்சிட்டு இன்னமும் ஹாண்ட்ஸ்மா அழகா இருந்தாரு தாத்தா...
(அப்போ வயசுல எப்படி இருந்திப்பாரு ...! யோசிச்ச எனக்கு, "டொய்ங்... கிளோஸ் யுவர் மைன்ட் வாய்ஸ்..." அப்டின்னு எனக்கே ஒரு அலெர்ட் சொல்லிக்கிட்டேன்...)
அவர் கூட இருந்த தாத்தாவும் சும்மா ஓயிட் அண்ட் ஓயிட் ஷர்ட் பேண்ட்ல கூலிங் கிளாஸ் போட்டுட்டு கால் மேல கால் போட்டு ஒரு புக் வச்சுட்டு டெய்லி படிச்சிட்டே இருப்பாரு.. ரெண்டு பேரும் புதுசா இந்த பார்க்குக்கு வராங்க. தனியா வேற வேற இடத்துல உட்காந்து இருந்தாங்க.. எப்படி ஒன்னா ஆனாங்க தெரில.. இன்னைக்கு அவங்களோட இளமை கால நினைவுகள திரும்பி பாத்துட்டு இருந்தாங்க.
நாங்களும் நடந்துட்டு
வந்து அவங்க எதிர் இடுக்கையில உட்கார்ட்ந்திட்டு சொன்னேன்... "நம்மளும் இப்படி தான்
ஏதாவது ஒரு பார்க்ல இப்படி உட்கார்ந்து, இப்போ
நம்ம எப்படி எல்லாம் இருந்தோம்னு இந்த மாதிரி பேசிட்டு இருப்போம்ல..."
"ஆமா, ஹர்ஷந்த்
ஹர்ஷினி குழந்தைங்கள ஸ்கூல்ல விட்டுட்டு வந்து இருப்போம். ஆனா நம்ம யார் வீட்ல இருப்போம்னு தெரில.. இல்ல தனியா இருப்போமா தெரில..."
"ஏன்? நம்ம ஹர்ஷந்த் வீட்ல தான் இருப்போம். நான் யாரையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி அவங்க அவங்க இருக்கலாம். எனக்கு ஒரு பிராப் இல்ல. நம்ம எல்லாரும் ஒன்னா தான் இருப்போம் எப்பவும்... ஹர்ஷினியும் ஒரே ஊர்ல தான் இருப்பா... எல்லாரும் எப்பவும் ஒன்னா தான் இருப்போம்..."
"ஆமா... கண்டிப்பா..."
வாழ்க்கை எப்படி
போகும்னு எந்த ஒரு கணிப்பும் இல்லாம இப்படியான ஒரு உரையாடல் எங்குளுக்குள்ள... நானும்
அவரும்.. ஒரு புன்னகையோட... எதிர்கால காட்சிகள்
எப்படி இருக்கும்னு ஒரு ஒத்திகை பார்த்தபடி எழுந்து அந்த பூங்காவை விட்டு வெளியேறினோம்.
தினமும், எல்.
கே. ஜி படிக்குறே எங்க செல்ல குட்டிங்க ரெட்டை குழந்தைங்க ஹர்ஷந்த் ஹர்ஷினிய ஸ்கூல்ல
விட்டுட்டு நடை போட வரும் பார்க்ல இந்த ரெண்டு
தாத்தாவும் பேசிட்டு இருந்த நெகிழ்வான காட்சி தான் இது..
முதுமை வந்தாலும்
இளமை என்றும் அழகிய ஒரு நினைவு தான். இளமை இருக்கும்போதே அதை அழகாகவும் சரியாகவும்
பயன்படுத்திக் கொண்டால், முதுமை அதை விட பிரகாசமானதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக