தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகள், உடல் வலிமையையும் மன ஒருமைப்பாட்டையும் பாரம்பரியத்தையும் வளர்ப்பதோடு, சமூக ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றன.
தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பற்றி இங்கே காணலாம்.
இயற்கை சார்ந்தது: பெரும்பாலும் இயற்கையான பொருட்களான புளியங்கொட்டை, கற்கள், மணல், பனை ஓலை போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன.
பல்லாங்குழி: பன்னிரண்டு குழிகள் கொண்ட பலகையில், புளியம்பழ விதைகள் அல்லது சோழிகளைக் கொண்டு விளையாடப்படும் இது, சிந்தனைத் திறனையும் கணக்குத் திறனையும் வளர்க்கிறது.
தாயம்: கவட்டைக்காய்களை உருட்டி, தந்திரமாக நகர்த்தி விளையாடும் தாயம், கணித அறிவுக்கும் திட்டமிடும் திறனுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.
கபடி: உடல் வலிமை, மூச்சுப் பயிற்சி மற்றும் குழு உணர்வை வளர்க்கும் வீர விளையாட்டு.
பம்பரம் & கோலிக்குண்டு: சிறுவர்கள் விரும்பி விளையாடும், கவனத்தையும் கைகளின் திறனையும் அதிகரிக்கும் விளையாட்டுகள்.
விளையாட்டின் நோக்கம்: தாயம், பல்லாங்குழி போன்றவை நினைவாற்றலை மேம்படுத்தவும், சிலம்பாட்டம் தற்காப்புக் கலையாகவும், நொண்டி, பச்சைக்குதிரை போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.
இவ்விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்து, நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பண்பாட்டு அடையாளங்களாகும்.
இது போன்ற தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளை நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இந்த விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல உடல் மற்றும் மன வலிமை தருபவை. இந்த விளையாட்டுகளை அதிகமாக விளையாட நாம் நம் குழந்தைகளை வெகுவாக ஊக்குவிக்க வேண்டும். இதனால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்; பயனும் பெறுவார்கள்.
இது போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்த நாம், நம் குழந்தைகளுக்கு அதற்கான சூழலை உருவாக்க மறந்து விடுகிறோம். விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு அவர்களை அழைத்து செல்வோம். அவர்களுக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்து வளர்ப்போம். மேலும் மீண்டும் மீண்டும் விளையாட ஊக்குவிக்கப்போம். நாமும் அவர்களோடு சேர்ந்து விளையாடி மகிழ்வோம் .
நேரம் கிடைக்கும்போது நாம் நம் பாரம்பரிய விளையாட்டுகளை நம் குழந்தைகளோடு விளையாடி மகிழ்வதால் நாமும் நம் சிறு வயது பருவ நாட்களுக்கு சென்று விடுவோம். சிறிது நேரம் குழந்தைகளாகவும் மாறி விடுவோம்.
